கோலியை தூக்கியடித்த தவான்.. நழுவவிட்ட ஹிட்மேன்!!

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 12:02 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 76 ரன்கள் குவித்த தவான், கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 76 ரன்கள் குவித்த தவான், கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், தொடக்கம் முதலே அடித்து ஆடி ஆஸ்திரேலிய வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பவுலர்களின் பந்துவீச்சையும் அடித்து ஆடிய தவான், பவுண்டரிகலை விளாசினார். 42 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார் தவான். 

இதன் மூலம் 2018ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்த தவான், ஒரு ஆண்டில் அதிகமான டி20 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் கோலி 641 ரன்களை குவித்ததே, ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் குவிக்கப்பட்ட அதிகமான ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தவான் முறியடித்துள்ளார். நேற்று அடித்த 76 ரன்களுடன் சேர்த்து தவான், இந்த காலண்டர் ஆண்டில் மட்டும் 648 ரன்களை குவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் டி20 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இன்னும் அதிகமான ஸ்கோரை தவான் எட்டிவிடுவார். இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா, 567 ரன்களை குவித்துள்ளார். ரோஹித்தும் கோலியை முந்துவதற்கு வாய்ப்புள்ளது. நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 82 ரன்கள் குவித்தால் கோலியின் சாதனையை முந்தியிருக்கலாம். ஆனால் அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 567 ரன்களில் உள்ளார். 
 

click me!