
இந்த ஐபிஎல் சீசனில் அனைத்து வகையிலும் சிறந்த அணிகள் எவை என பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் களம் கண்டது. ஆனால் தொடர் தோல்விகளிலிருந்து மீள முடியாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதிய பெங்களூரு அணி, 147 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. 10 போட்டிகளில் 3ல் வெற்றியுடன் வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பெங்களூரு அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.
பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, தொடர் தோல்விகள் குறித்தும் இந்த சீசனின் சிறந்த அணிகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். அப்போது தோல்வி குறித்து கூறிய கோலி, ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் பிற்பாதியில் ஒவ்வொரு முறையும் எதிரணியை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டதாகவும் இந்த தொடர் முழுவதும் அதுதான் நடந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் அனைத்து வகையிலும் சிறந்த அணிகளாக பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் திகழ்வதாகவும் பவுலிங்கில் சிறந்த அணியாக ஹைதராபாத் இருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.