
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.
ஐபிஎல் 11வது சீசனின் 39வது போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க, இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றே தீர வேண்டும்.
இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களம் கண்ட ராஜஸ்தான் அணி, இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான் அணி. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில், பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.