சச்சினை நோக்கி பயணம் செய்யும் கோலி...! அரங்கத்தை அதிர வைத்து சதம் அடித்து சாதனை...!

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 07:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
சச்சினை நோக்கி பயணம் செய்யும் கோலி...! அரங்கத்தை அதிர வைத்து சதம் அடித்து சாதனை...!

சுருக்கம்

Kohli is the captain of the Indian team is century

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் அடித்து சர்வதேச அரங்கில் அதிக சதம் அடித்ததில் 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 

6 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் 3 டி- 20 போட்டியிலும் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.  

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தார். 

இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ‘டக் அவுட்’ ஆனார். அடுத்துவந்த கேப்டன் கோலியும் ரபாடா வேகத்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் கோலி அம்பயர் முடிவை ரிவியூ செய்தார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்ததால் அம்பயரின் முடிவு மாற்றப்பட்டு கோலி நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கோலி, ஒருநாள் அரங்கில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையடுத்து ஒட்டுமொத்த சர்வதேச அரங்கில் தனது 55வது சதத்தை பூர்த்தி செய்த கோலி, அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் , பாண்டிங் , சங்ககரா , காலிஸ் ஆகியோரை தொடர்ந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?