விஜய் ஹஸாரே கோப்பை: 2-வது ஆட்டத்தில் கோவாவிடம் வீழ்ந்தது தமிழகம்...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
விஜய் ஹஸாரே கோப்பை: 2-வது ஆட்டத்தில் கோவாவிடம் வீழ்ந்தது தமிழகம்...

சுருக்கம்

Vijay Hazare Trophy In the 2nd match Goa lost to Goadefeat tamilagam

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது 2-வது ஆட்டத்தில் கோவாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது தமிழகம்.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டிசென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 48.5 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து ஆடிய கோவா 46.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றி கண்டது.

முதலில் டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 2 பவுண்டரிகள் உள்பட 52 ஓட்டங்கள், முரளி விஜய் 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உள்பட 51 ஓட்டங்கள் எடுத்தனர்.

கோவா தரப்பில் தர்ஷன் மிசல், ஸ்ரீனிவாஸ் ஃபட்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய கோவா அணியில் அதிகபட்சமாக ஸ்வப்னில் அஸ்னோத்கர் சதம் கடந்து 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 103 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த் ஆடிய கேப்டன் சகுன் காமத் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறே, தர்ஷன் மிசல் 5 ஓட்டங்களுடனும், லக்ஷய் கர்க் ஓட்டங்கள் இன்றியும் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தமிழக தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்கள், அஸ்வின் கிறிஸ்ட், ரஹீல் ஷா, விஜய் சங்கர், அபராஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி, இந்தப் போட்டியில் கோவாவிடம் தமிழகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

தமிழகம் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மும்பையை எதிர்கொள்கிறது என்பது கொசுறு தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரிங்கு சிங்கின் தந்தை மரணம்.. சிலிண்டர் சுமந்தே மகனை சிகரம் தொட வைத்த நிஜ ஹீரோ.. ரசிகர்கள் ஷாக்!
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?