தம்பி கோலி.. அது உங்களுக்கு மட்டும் சொந்தமில்ல!! தெறிக்கவிட்ட டெண்டுல்கர்

By karthikeyan VFirst Published Aug 25, 2018, 12:35 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பியதால், தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, இங்கிலாந்தை தொடரை வெல்லவிடாமல் பார்த்துக்கொண்டது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரஹானே-கோலி ஜோடி ஆடிய ஆட்டம் மிகவும் முக்கியமானது. அந்த இன்னிங்ஸில் 97 ரன்கள் குவித்த கோலி, 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் கோலி சதமடித்தார். 103 ரன்கள் குவித்து அவுட்டானார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 200 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

அதேநேரத்தில் இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை அளித்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக், அந்த அணி 161 ரன்களில் ஆல் அவுட்டாக முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் அசத்திய ஹர்திக், அரைசதம் கடந்து அவுட்டாகாமல் இருந்தார்.

இவ்வாறு கோலி மற்றும் பாண்டியா ஆகிய இருவருமே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். எனினும் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங்கிற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், கோலி மற்றும் ஹர்திக் ஆகிய இருவரும் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு இருவருமே முக்கிய பங்காற்றினர். விராட் கோலியின் இரண்டு இன்னிங்ஸும் முக்கியமானது. அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். 

முதல் இன்னிங்ஸில் ஹர்திக் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் முக்கியமானது. ஜோ ரூட், பேர்ஸ்டோ போன்ற முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, விரைவாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்திக். இங்கிலாந்து அணியை குறைந்த ரன்களில் சுருட்டியதால்தான் 500 ரன்களுக்கு அதிகமான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. எனவே இருவருமே இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்பதால், இருவரும் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார். 
 

click me!