இங்கிலாந்தை டென்ஷனாக்கிய ஹர்பஜன்!! அப்படி என்னதான் சொன்னாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Aug 25, 2018, 11:04 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லும் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லும் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 

முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்டில் வென்று மீண்டெழுந்துள்ளது. இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாடு அடுத்துவரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன். சௌத்தாம்டன் நகரில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியிலும் ஓவலில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று இந்திய அணி 3-2 என தொடரை வெல்லும் என நம்புகிறேன். 

ஓவல் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எழும்பும் என்பதால், அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் போட்டி முடிவை கணித்து கூறமுடியாது. இப்போதுள்ள சூழலில் இந்திய அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகளே உள்ளன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஹர்திக், ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகின்றனர். ஒவ்வொருவருமே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர். 

தற்போதைய சூழலில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலவீனமடைந்திருக்கிறது. அந்த அணி வீரர்கள் நம்பிக்கை இழந்து ஆடுகிறார்கள். வேகப்பந்து மற்றும் ஸ்பின் ஆகிய இரண்டுக்குமே திணறுகிறார்கள். இந்திய அணியின் பேட்டிங்கை காட்டிலும் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில்தான் அதிகமான சிக்கல்கள் இருக்கின்றன.

எனவே இனிவரும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றும் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

click me!