கோலிக்கு அவ்ளோ சீன்லாம் கிடையாது!! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 25, 2018, 10:20 AM IST
Highlights

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ள சேவாக், ஏன் என்ற காரணத்தையும் விளக்கியுள்ளார். 
 

சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ள சேவாக், ஏன் என்ற காரணத்தையும் விளக்கியுள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். ரன் வேட்கை கொண்ட கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்து வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு(49 சதங்கள்) அடுத்து 35 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்தையும் சேர்த்து) அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சதங்களுடன் 5ம் இடத்தில் உள்ளார். 

29 வயதான கோலி, இன்னும் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் ஆட வாய்ப்புள்ளது. எனவே சச்சினின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக வலம்வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். 

இந்நிலையில், சச்சினுடன் கோலி ஒப்பிடப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் போன்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்தால், சச்சினுடன் கோலியை ஒப்பிடுவதில் லாஜிக் இருக்கிறது. விராட் கோலி உட்பட ஒவ்வொரு வீரரும் சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முயல்கின்றனர் என சேவாக் தெரிவித்தார். 
 

click me!