பேட்டிங், பவுலிங்.. இரண்டிலுமே இந்திய வீரர்கள் முதலிடம்..!

 
Published : Nov 08, 2017, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பேட்டிங், பவுலிங்.. இரண்டிலுமே இந்திய வீரர்கள் முதலிடம்..!

சுருக்கம்

kohli and bumrah took top place in icc batting and bowling ranking

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் கேப்டன் விராட் கோலியும், பவுலிங்கில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இந்திய அணி, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. முந்தைய இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி பெற்றுள்ள புள்ளிகளை நெருங்கிவிட்டது இந்திய அணி.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 103 ரன்களை எடுத்த விராட் கோலி 824 தரவரிசைப் புள்ளிகளுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.  2-ம் இடத்தில் உள்ள ஆரோன் பிஞ்ச், கோலியைக் காட்டிலும் 40 புள்ளிகள் பின் தங்கி உள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 724 தரவரிசைப் புள்ளிகளுடன் பந்து வீச்சில் முதலிடம் வகிக்கிறார்.  இவருக்கு நெருக்கமாக பாகிஸ்தானின் இமாத் வாசிம் 719 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

இந்தியாவிடம் தொடரை இழந்ததன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, முதலிடத்தை பாகிஸ்தானிடம் இழந்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-ம் இடத்தில் உள்ளது. 

டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!