ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்…

Asianet News Tamil  
Published : Nov 08, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்…

சுருக்கம்

He is the first Australian player to score hat-trick twice in a single match ...

ஒரு போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலியாவில், 'ஷெஃபீல்டு ஷீல்டு' முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ் - மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ் அணி 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது, 67-வது ஓவரை வீசிய நியூ செளத் வேல்ஸ் வீரரான ஸ்டார்க் 4-வது பந்தில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், அடுத்த பந்தில் டேவிட் மூடி, கடைசி பந்தில் சிம்மன் மேக்கின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல், மேற்கு ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸின்போது 76-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகள் மற்றும் 77-வது ஓவரின் முதல் பந்தில் முறையே பெஹ்ரென்டார்ஃப், டேவிட் மூடி, ஜோனோ வெல்ஸ் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய 8-வது வீரர் ஸ்டார்க் ஆவார். அதேவேளையில், கடந்த 39 ஆண்டுகளில் இந்தச் சாதனையை செய்துள்ள முதல் வீரரும் இவரே.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

5வது T20 போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து சிங்கப்பெண்கள் மாஸ்!
WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!