தோனி - கோலி.. யார் சிறந்த கேப்டன்..? ராகுல், ஹர்திக் பாண்டியா அதிரடி

By karthikeyan VFirst Published Jan 6, 2019, 1:30 PM IST
Highlights

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, அப்படியே தோனிக்கு நேரெதினாவர். 

பொதுவாகவே ஒரு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, புதிதாக பொறுப்பேற்ற கேப்டனின் செயல்பாடுகளை முந்தைய கேப்டனுடன் ஒப்பிடுவது என்பது பொதுப்புத்தியின் இயல்புதான். 

அந்த வகையில், இந்த ஒப்பீட்டை அதிகமாக எதிர்கொண்டவர் மட்டுமல்லாது விமர்சிக்கப்பட்டவரும் கோலி தான். மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படக்கூடிய பண்பை கொண்ட தோனி, இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்து முத்திரை பதித்தவர்.

அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, அப்படியே தோனிக்கு நேரெதினாவர். ஆக்ரோஷமான இயல்பு கொண்டவர் கோலி. கோலியின் கேப்டன்சி, கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாளும் முறை ஆகியவை கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகிறது. கோலியின் கேப்டன்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், நம்பரின் அடிப்படையில் பார்த்தால் கோலி மிகச்சிறந்த கேப்டனாகவே இருக்கிறார். 

தோனி - கோலி இடையேயான ஒப்பீடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில், கோலியின் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் ஆடிவரும் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரிடமும் தோனி - கோலி இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, நான் தோனியின் தலைமையில்தான் அறிமுகமானேன். அவருக்கு கீழ் ஆடியது மிகவும் சிறப்பான அனுபவம். எனவே தோனிதான் சிறந்த கேப்டன் என்றார் ஹர்திக். சாதனைகளின் அடிப்படையில் பார்த்தால் தோனி தான் என்று ராகுலும் அதிரடியாக தெரிவித்தார். 
 

click me!