சென்னை அணியுடன் மோதப்போவது யார்..? கொல்கத்தா vs ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை.. வரலாறு என்ன சொல்கிறது?

First Published May 25, 2018, 4:32 PM IST
Highlights
kkr vs srh match and who may have chance to win


ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. 

இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்று போட்டி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. வில்லியம்சன் கேப்டன்சியிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை தினேஷ் கார்த்திக். கேப்டனாக மட்டுமல்லாமல் இக்கட்டான நேரங்களில் பேட்டிங்கிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

இந்த சீசனின் லீக்கில் இரு அணிகளும் இரு முறை மோதின. இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே தலா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரஸ்பரம் எதிரணியை வீழ்த்தின.

பவுலிங்கில் சிறந்து விளங்கும் ஹைதராபாத் அணி, பேட்டிங்கில் சோபிக்க தவறுகிறது. டாப் ஆர்டர் வீரர்களான தவான், வில்லியம்சன் ஆகியோரை வீழ்த்திவிட்டால் போதும். இந்த சீசனின் பெரும்பாலான போட்டிகளில் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. ஆனால், கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன், கிறிஸ் லின் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். உத்தப்பாவும் ஓரளவிற்கு பங்களிப்பை அளிக்கிறார். 

மிடில் ஆர்டரிலும் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில் ஆகியோரும் சிறப்பாக ஆடுகின்றனர். சுனில் நரைன், குல்தீப், பிரசித் ஆகியோர் பவுலிங்கில் சிறந்து விளங்குகின்றனர். இரு அணிகளையும் அணியளவில் ஒப்பிட்டால், ஹைதராபாத்தை விட கொல்கத்தா அணி அனைத்து வகையிலும் சமபலம் கொண்ட அணியாக திகழ்கிறது. 

மேலும் கொல்கத்தாவிற்கு கூடுதல் பலம் என்பது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுவது. ஈடன் கார்டனில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தாவை ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது. அதுவும் இந்த சீசனில் தான். 

இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் 9ல் கொல்கத்தா அணியும் 5ல் ஹைதராபாத்தும் வென்றுள்ளன.

இவற்றின் அடிப்படையில், ஹைதராபாத்தை விட கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த சீசனில் இதுவரை மோதிய மூன்று போட்டிகளிலும் சென்னையிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவியுள்ளது. 

எனவே இறுதி போட்டியில் சென்னை அணிக்கு நிகராக ஆடி டஃப் கொடுக்க வேண்டுமென்றால், அதுவும் கொல்கத்தா அணியால்தான் முடியும். ஏற்கனவே மூன்று போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளதால், சென்னை அணி மிகவும் துணிச்சலுடன் ஆடும். ஆனால், கொல்கத்தா அணி, சென்னை அணிக்கு கடினமான போட்டியை அளிக்கும். 
 

click me!