
ஐபிஎல் 11வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் மற்றும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழகத்தை சேர்ந்த வீரர். அதேபோல் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் தமிழ்நாட்டை சேர்ந்த கலாநிதி மாறன்.
இறுதி போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியிருப்பது சென்னை அணி, தமிழ்நாட்டு அணி தான்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.