ஐ.எஸ்.எல்: புனேவை வீழ்த்தி 5-வது வெற்றியை அடைந்தது கேரளா...

 
Published : Feb 03, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ஐ.எஸ்.எல்: புனேவை வீழ்த்தி 5-வது வெற்றியை அடைந்தது கேரளா...

சுருக்கம்

IsL Kerala won 5th victory defeat pune

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 62-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டியை வீழ்த்தி, கேரளா பிளாஸ்டர்ஸ் ஐந்தாவது வெற்றியை பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் - 4 (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் புனேயில் நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் -  புனே சிட்டி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. 58-வது நிமிடத்தில் கேரளாவின் ஜாக்கிசந்த்சிங் கோல் அடித்தார்.

78-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை புனே வீரர் எமிலியானோ அல்பாரோ கோலாக மாற்றினார்.

இதையடுத்து சமனை நோக்கி நகர்ந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் கேரளாவின் சி.கே.வினீத் கோல் போட்டு கேரளாவுக்கு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தேடித்தந்தார்.

14-வது லீக்கில் ஆடிய கேரளாவுக்கு இது 5-வது வெற்றியாகும். புனே சிட்டிக்கு 5-வது தோல்வியாகும்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

மெஸ்ஸி, கால்பந்து ரசிகர்களிடம் மன்னி‍ப்பு கேட்ட மம்தா பானர்ஜி..! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடி கைது!
45,000 கொடுத்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.. சேர்களை அடித்து நொறுக்கி ரசிகர்கள் ஆவேசம்! போலீஸ் தடியடி!