டிராவில் முடிந்தது 9-வது ஐ.எஸ்.எல் லீக்…

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 01:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
டிராவில் முடிந்தது 9-வது ஐ.எஸ்.எல் லீக்…

சுருக்கம்

8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை இரவு அரங்கேறிய 9–வது லீக்கில் கேரளா பிளாஸ்டர்சும், டெல்லி டைனமோசும் மோதின. இரு அணிக்கும் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் கோலாக்க தவறின. கடைசி நிமிடம் வரை இதே நிலை நீடித்ததால் திரண்டு இருந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

அதே சமயம் அவ்வப்போது முரட்டு ஆட்டம் தலைதூக்கியது. குறிப்பாக 83–வது நிமிடத்தில் டெல்லி வீரர் புருனே பெலிசரி பந்தை உதைக்க முயற்சித்த போது, அது கேரளாவின் எலாட்ஜி நோயே மீது பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எலாட்ஜி நோயே அவரை அடிப்பது போல் எகிறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்களும், நடுவரும் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.

முடிவில் இந்த சீசனில் கோல் இன்றி (0–0) டிரா ஆன முதல் ஆட்டமாக இது அமைந்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி – அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
IND vs SL: ஜெயிக்க வேண்டிய மேட்ச் டிரா ஆனது எப்படி? இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? சுப்மன் கில் விளக்கம்!