இந்திய அணி 557 ரன்களில் டிக்ளேர் - கோலி 211, ராகனே 188 ரன்கள் அபாரம்

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 06:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
இந்திய அணி 557 ரன்களில் டிக்ளேர் - கோலி 211, ராகனே 188 ரன்கள் அபாரம்

சுருக்கம்

இந்தூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியி 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்த்து.

 கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். துணைக் கேப்டன் ரகானே 188 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

இந்தூரில் நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடந்து வருகிறது. முதல்நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்த்து. கோலி 103 ரன்களிலும்,ரகானே 79 ரன்களிலும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டம் தொங்கியதில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தனர்.

சிறப்பாக பேட் செய்த ரகானே சதம் அடித்தார். அதைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராத் கோலி 273 பந்துகளில் 150 ரன்களையும், 347 பந்துகளில் இரட்டை சதத்தையும் எட்டினார். ரகானே முதல்முறையாக டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை எட்டினார்.

கோஹி 211 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இவரின் கணக்கில் 20 பவுண்டரிகள் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு ரகானே-கோலி கூட்டணி 365 ரன்கள் குவித்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதற்கு முன் ஜூலை மாதம், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தெடரில் இரட்டை சதம் அடித்திருந்தார். ஒரே ஆண்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன், அன்னிய மண்ணில் இரட்டைசதம் அடித்த இந்தியகேப்டன் எனும் பெருமையையும் கோலி பெற்றார்.

டெஸ்ட் அரங்கில் விராத் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 12 சதங்களையும், 12 அரைசதங்களையும் அடித்துள்ளார்.3,326 ரன்கள் சேர்துள்ளார்

இதையடுத்து களமிறங்கிய ரோகித்சர்மாவுடன், ராகனே இணைந்தார். நிதானமாக ஆடிய ரகானே 188 ரன்கள் சேர்த்த போது, போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார். இவரின் கணக்கில் 4 சிக்சர்கள், 18பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த ஜடேஜா, ரோகித்சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா நிதானம் காட்ட ரோகித் தனக்கே உரிய வகையில் அதிரடியாக பேட்டை சுழற்றி நியூசிலாந்து வீர்ர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 62 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 51 ரன்னிலும், ஜடேஜா 17 ரன்னிலும் இருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.

169 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்த து. நியூசிலாந்து தரப்பில் போல்ட், படேல் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்