3 ஆண்டுகளுக்குப் பின் சதம் அடித்த கேப்டன் கோலி : விராத்தின் சாதனைகள் ஒரு பார்வை

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 05:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
3 ஆண்டுகளுக்குப் பின் சதம் அடித்த கேப்டன் கோலி : விராத்தின் சாதனைகள் ஒரு பார்வை

சுருக்கம்

இந்தூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதற்கு முன் ஜூலை மாதம், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தெடரில் இரட்டை சதம் அடித்திருந்தார்.

ஒரே ஆண்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் கோலி பெற்றார். அதுமட்டுமல்லாமல் அன்னிய மண்ணில் இந்திய கேப்டன் ஒருவர் அடித்த முதல் இரட்டை சதமாக அமைந்தது.

இந்தூரில் நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடந்து வருகிறது. ஒரு நேரத்தில் 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணி கோலியின் சிறப்பான பேட்டிங்கால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் கோலியின் சிறப்பான ஆட்டம் 2-ம் நாளிலும் தொடர்ந்த்து. அதிரடியாக ஆடிய கோலி 20 பவுண்டரிகளுடன் இரட்டை சத த்தை நிறைவு செய்தார்.

டெஸ்ட் அரங்கில் விராத் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 12 சதங்களையும், 12 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3,326 ரன்கள் சேர்துள்ளார்.

171 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 7,212 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 25 சதங்களும், 36 அரைசதங்களும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் சதம், 8 இன்னிங்களாக அரைசதம் கூட அடிக்க முடியாமல் பார்முக்கு திரும்பாமல் கோலி தவித்து வந்தார்.

அனைத்துக்கும் இப்போது முடிவு கட்டியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு ஏற்றபின், உள்நாட்டில் கோலிஅடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

இந்த டெஸ்ட் தொடரில் கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். கடைசியாக, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சதம் அடித்திருந்த கோலி 3 ஆண்டுகள் இடைவெளியில் சதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்