ipl umran malik: சத்தியமா சொல்றேன்! டெஸ்ட் அணியில் இடமிருக்கு: உம்ரான் மாலிக்கை புகழ்ந்த ரவி சாஸ்திரி

By Pothy RajFirst Published May 19, 2022, 4:55 PM IST
Highlights

ipl umran malik :இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் இருக்கிறது,அதற்கான தகுதி இருக்கிறது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதியளித்தார்

இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் இருக்கிறது,அதற்கான தகுதி இருக்கிறது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதியளித்தார்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள உம்ரான் மாலிக் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகவேகமாகப் பந்துவீசியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உம்ரான் மாலிக் மணிக்கு 156.9 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்திய உம்ரான் மாலிக், ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.

உம்ரான் மாலி்க் பந்துவீச வந்தாலே பேட்ஸ்மேன்களுக்கு பெரிய தலைவலியாகவும், நெஞ்சை பதறவைக்கும்விதமாகவும் இருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கடந்த போட்டியில் பந்துவீசி, அவரின் தலைஹெல்மெட்டில் உம்ரான் வீசிய பவுன்ஸர் தாக்கியது. உம்ரான் பந்துவீச்சின் அதிவேகத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் பவுண்டரி அடிக்க வேண்டும் அல்லதுவிக்கெட்டை இழக்க வேண்டும் என்ற ரீதியில்தான் இருக்கிறது

உம்ரான் மாலிக் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயி்ற்சியாளர் ரவி சாஸ்திரி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ நேரடியாக பிரதான வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும். உம்ரான் மாலிக்கை தனியாகவிடாமல் அவரை அனைத்துப் போட்டிகளிலும் களமிறக்க வேண்டும். முக்கிய வீரர்களான பும்ரா, ஷமி ஆகியோருடன் சேர்ந்து பந்துவீசச் செய்தால்தான் அதிகமான விஷயங்களை உம்ரான் கற்றுக்கொள்வார்.

அணியில் சிறந்த பயிற்சியாளர்கள், ஊழியர்கள் இருப்பதால், உம்ரான் மாலிக்கிற்கு உதவுவார்கள். எப்போதுமே மூத்த வீரர்களுடன் சேர்ந்து உம்ரானை பயன்படுத்த வேண்டும். 

உம்ரான் மாலிக் பந்துவீசினாலே பேட்ஸ்மேன்கள் தெறிக்கிறார்கள். மாலிக்கின்பந்துவீச்சை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். விக்கெட் எடுத்தாலும் சரி விக்கெட் எடுக்காவிட்டாலும் சரிஉம்ரான் மாலிக் தனது பந்துவீச்சின் வேகத்தை குறைப்பதேஇல்லை. உம்ரான் மாலிக் தனது பந்துவீச்சில் இன்னும் சிறிது கட்டுக்கப்பு, துல்லியம், லைன்லென்த் தேவைப்படுகிறது. ஸ்டெம்ப் லைனில் உம்ரான் பந்துவீச விரும்பினால், லென்த்தை மட்டும் மாற்றி ஸ்டெம்பை நோக்கி பந்துவீச வேண்டும். இது பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும்.

உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து புதிய வீரர் களத்துக்குள் வரும்போது அவரின் பந்துவீச்சு சவாலாக இருக்கும். அதற்கு காரணம் உம்ரான் வேகம்தான்.

உம்ரான் மாலி்க்கின் சிறப்பான பந்துவீச்சால் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றாலும் வியப்படையமாட்டேன். சத்தியமாகக் கூறுகிறேன், இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்புள்ளது.இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுப் பிரிவில் உள்ள பும்ரா, ஷமி, ஆகியோருடன் உம்ரானும் சேர்வார்.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, ஒருபேட்டியில் உம்ரான் மாலிக்கைப் பற்றிபேசும்போது, “ உம்ரான் மாலிக் பந்துவீச்சு பெராரி கார் போன்றது. அவர் வேகத்தை மட்டும் குறைக்கவே மாட்டார். அவர் வேகத்தைக் குறைத்து, லைன் லென்த்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்

click me!