ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம்!! 351 வீரர்கள்.. எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது..? முழு விவரம்

By karthikeyan VFirst Published Dec 18, 2018, 1:39 PM IST
Highlights

ஒரு காலத்தில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடி வரை கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ரூ.1 கோடி. 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளது. இதுவரை ஏலத்தை நடத்திவந்த ரிச்சர்ட் மேட்லி மாற்றப்பட்டு இந்த முறை ஹுஜ் எட்மேட்ஸ் ஏலத்தை நடத்த உள்ளார். 

அனைத்து ஐபிஎல் அணிகளுமே தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அந்த வகையில் 346 வீரர்கள் ஏலம் விடப்பட இருந்தனர். கடைசி நேரத்தில் 5 வீரர்களின் பெயர்களை சேர்க்க, மொத்தமாக 351 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர். 

இந்த ஏலத்தில் பிரண்டன் மெக்கல்லம், யுவராஜ் சிங் போன்ற வீரர்களை அவர்கள் இருந்த அணிகள் கழட்டிவிட்டுள்ளன. மேலும் இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயர், இங்கிலாந்தின் சாம் கரன் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் உள்ளனர். 

அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர்கள்:

பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், சாம் கரன், கோரி ஆண்டர்சன், கோலின் இங்கிராம், மேத்யூஸ், டார்ஷி ஷார்ட் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடி. 

ஒரு காலத்தில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடி வரை கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ரூ.1 கோடி. ஷமி, ரித்திமான் சஹா ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.1 கோடி தான். 

ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை கையிருப்பு இருக்கிறது என்பதை பார்ப்போம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ.8. 4 கோடி

மும்பை இந்தியன்ஸ்: ரூ.10.65 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ.15.2 கோடி

டெல்லி கேபிடள்ஸ்: ரூ.25.5 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரூ.36.2 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ.9.7 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.20.95 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ.18.15 கோடி
 

click me!