எமி ஜாக்சன் ஆட்டத்துடன் அட்டகாசமாக தொடங்கிய  ஐபிஎல் போட்டிகள்.…முன்னாள் வீரர்களுக்கு கௌரவம்…

Asianet News Tamil  
Published : Apr 06, 2017, 05:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
எமி ஜாக்சன் ஆட்டத்துடன் அட்டகாசமாக தொடங்கிய  ஐபிஎல் போட்டிகள்.…முன்னாள் வீரர்களுக்கு கௌரவம்…

சுருக்கம்

ipl opening ceremony

எமி ஜாக்சன் ஆட்டத்துடன் அட்டகாசமாக தொடங்கிய  ஐபிஎல் போட்டிகள்.…முன்னாள் வீரர்களுக்கு கௌரவம்…

இந்தியன் பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கள் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியதன் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. 10 ஆவது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன.
 

இந்த ஐபிஎல் – 10 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஹைதராபாதில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சன்  அசத்தலாக ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண், வீரேந்திர சேவாக் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புக்காக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சச்சின், கங்குலி, லட்சுமண், சேவாக் ஆகியோர் பேட்டரி காரில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பாராட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும், செளரவ் கங்குலிக்கு பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணாவும், வி.வி.எஸ்.லட்சுமணுக்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயும் நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தனர்.

சேவாக்கிற்கு பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார்

நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோப்பையுடன் மைதானத்தில் வலம் வந்தார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதனையடுத்து நடைபெற்ற  முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  விளையானை.

இந்த  ஐ.பி.எல். போட்டி மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் நடக்கிறது. 8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு  அணியும் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!