ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையல! இந்த முறையாவது அதை வாங்கிடனும்... வைராக்கியத்தில் டெல்லி!  

 
Published : May 03, 2018, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையல! இந்த முறையாவது அதை வாங்கிடனும்... வைராக்கியத்தில் டெல்லி!  

சுருக்கம்

IPL Highlights DD vs RR Delhi Edge Rajasthan In Thriller

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீனில் இரண்டு அணிகளும்  இழுபறியில் இருந்த   நிலையில்  ஆட்டத்தில், மழை குறுக்கிட்டதால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனில் இதுவரை நடந்த 31 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 ஆட்டங்களில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் சாம்பியனாகும் கனவுடன் களமிறங்கியது. ஆனால், இதுவரை ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையாத டெல்லி அணி இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வந்த டெல்லிக்கு கடைசி நேரத்தில் மழை கைகொடுத்தது.



இதுவரை நடந்த டெல்லி அணி 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றது, வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. இதுவரை இதுவரை ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையாத விரக்தியில் இருந்த கவுதம் கம்பீர் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனானார். அஜிங்யா ரஹானே கேப்டனாக உள்ள ராஜஸ்தான் 7ல் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த நிலையில்,  இரு அணிகளும் நேற்று மோதியது.  இந்த சீசனில் ஏற்கனவே இரண்டு அணிகளும் மோதின. கடந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ராஜஸ்தான் அணி வென்றது. இனி நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் இருந்த இரு அணிகள். நேற்றைய போட்டியில் வெற்றி என்பது, வாழ்வா - சாவா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்திருந்த ஆட்டத்தில், திடீர் மழை வெளுத்து வாங்கியதால் ராஜஸ்தானை வீழ்த்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!