ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் வீழ்ந்தது  பெங்களூரு…சன் ரைசர்ஸ் அசத்தல் வெற்றி…

Asianet News Tamil  
Published : Apr 06, 2017, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் வீழ்ந்தது  பெங்களூரு…சன் ரைசர்ஸ் அசத்தல் வெற்றி…

சுருக்கம்

IPL banngalore vs hydrabad

ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் வீழ்ந்தது  பெங்களூரு…சன் ரைசர்ஸ் அசத்தல் வெற்றி…

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.

இதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40  ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் அணியின் கேப்டன் வாட்சன் 22 ரன்களில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!