Rajasthan Royals : 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த சீசனில் இருந்து தனது சில கீ வீரர்களை தக்கவைத்துள்ளது. ஆனால் வரவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு முன்னதாக தனது நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஸ் பட்லரை விடுவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கும், ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் 2024-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமானவர்கள் தலா ரூ.14 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.11 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ஒரே வெளிநாட்டு வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் சந்தீப் ஷர்மா ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ஒரே அன்கேப் வீரர். 41 கோடிக்கு பர்ஸுடன் ஏலத்தில் இறங்குவார்கள்.
undefined
விராட் & அனுஷ்கா; வைரலான போட்டோவில் இருப்பது அவர்கள் மகன் ஆகாய் தானா?
வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர்களின் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த சூழலில் அதற்கு முன்னதாக இன்று நவம்பர் 24 ஆம் தேதி இந்த ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள டீம்களின் வீரர்களுக்கான ஏலம் இன்று மாலை முதல் நடைபெற்று வருகிறது. அமீரகத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் பெருந்தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரை இன்னும் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல அந்த அணிக்கு வெளிநாட்டிலிருந்து இன்னும் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் அந்த அணியின் கையில் இன்னும் 18.85 கோடி மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வரர்களான இந்திய வீரர்கள்: ரூ.23 கோடிக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட டாப் 3 வீரர்கள்!