ipl 2022| rashid khan| GT: மூன்றே வார்த்தைகள்தான்: ஹர்திக் பாண்டியாவின் மகனுடன் ரஷித் கான் கொஞ்சல் வீடியோ

Published : May 05, 2022, 11:50 AM IST
ipl 2022| rashid khan| GT: மூன்றே வார்த்தைகள்தான்: ஹர்திக் பாண்டியாவின் மகனுடன் ரஷித் கான் கொஞ்சல் வீடியோ

சுருக்கம்

ipl 2022 :rashid khan :GT : குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மகனுடன் ரஷித் கான் கொஞ்சி விளையாடிய காட்சியை அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மகனுடன் ரஷித் கான் கொஞ்சி விளையாடிய காட்சியை அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் புள்ளி அட்டவணையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்தபோதிலும் முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி இருந்து வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரில் முதல்முறையாக அறிமுகமாகிய குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளி்ல 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது . துணைக் கேப்டன் ரஷித் கான் பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா விளையாடாத ஒரு போட்டியில் ரஷித் கான் தலைமை ஏற்றுச் சென்று வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

கடைசியாக நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 8 விக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் அணி பேட்ஸ்மேன் சாய் சுதர்ஸன்(65) மட்டும்தான் நல்ல ஸ்கோர் செய்தார். மற்ற வீரர்களான ஷுப்மான் கில்(9) சஹா(21), பாண்டியா(1), மில்லர்(11), திவேட்டியா(11), ரஷித்கான்(0) என விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

144 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து சேஸிங்செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷிகர் தவண்(62), ராஜபக்ச(40), லிவிங்ஸ்டன்(30) ஆகியோர் சேர்ந்து அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்

 

இந்நிலையில் குஜராத் டைட்ன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியாவுடன் துணைக் கேப்டன் ரஷித் கான் கொஞ்சி விளையாடும் வீடியோவை அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், “ மூன்றே வார்த்தைகள்தான், எப்போதுமே கியூடஸ்ட் வீடியோ” என்று தெரிவித்துள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!