ipl 2022: mi vs srh: ஐபிஎல்2022: பும்ராவின் சாதனையைத் தகர்த்த உம்ரான் மாலிக்

Published : May 18, 2022, 12:08 PM IST
ipl 2022: mi vs srh: ஐபிஎல்2022: பும்ராவின் சாதனையைத் தகர்த்த உம்ரான் மாலிக்

சுருக்கம்

ipl 2022 : mi vs srh  :ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது.

 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் பும்ராவின் சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.

ஒரு ஐபிஎல் சீசனில் மிக இளம் வயதில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் சாதனையையும் உம்ரான் மாலிக்  படைத்தார். இதற்கு முன் பும்ரா அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். 2017ம்ஆண்டு ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்திய பும்ரா தனது 23 வயது 165 நாட்களில் சாதனையை நிகழ்த்தினார். ஆனால், உம்ரான் மாலிக்,தனது 22 வயது 176 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி, பும்ராவை முறியடித்துள்ளார்.

குறைந்தவயதில் அதிக விக்கெட்டுகள்:

உம்ரான் மாலிக்: 22வயது 176 நாட்கள்(21 விக்கெட்)
ஜஸ்பிரித் பும்ரா: 23 வயது 165 நாட்கள்
ஆர்பி சிங்: 23வயது 166 நாட்கள்(2009ஐபிஎல்)
பிரக்யான் ஓஜா: 23 வயது 225 நாட்கள்(2020 ஐபிஎல்)

2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் உம்ரான் மாலிக் 4-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் யஜுவேந்திர சஹல் உள்ளார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?