ipl 2022: Gt vs pbks : ரன் அவுட் ஆனது யார் தவறு? பஞ்சாப் பந்துவீச்சாளரிடம் கோபப்பட்ட ஷூப்மான் கில்

By Pothy RajFirst Published May 4, 2022, 11:37 AM IST
Highlights

ipl 2022 : Gt vs pbks : மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களால் ரன் அவுட் செய்யப்பட்டவுடன் பந்துவீச்சாளரிடம் கோபப்பட்டு சண்டையிட்டு குஜராத் டைட்டஸ்ன் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் வெளியேறினார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களால் ரன் அவுட் செய்யப்பட்டவுடன் பந்துவீச்சாளரிடம் கோபப்பட்டு சண்டையிட்டு குஜராத் டைட்டஸ்ன் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் வெளியேறினார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 145 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் அணி வீரர் ஷிகர் தவண் 62 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்குஅழைத்துச் சென்றனர்.

 

WICKET!

Shubman Gill is run out for 9 runs. lose their first.

Live - https://t.co/LcfJL3lO5i pic.twitter.com/mtBQemzmE3

— IndianPremierLeague (@IPL)

 

இதில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மான் கில், விருதிமான் சஹா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஷுப்மான் கில் எஸ்ட்ரா கவரில் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்று ஓடினார். ஆனால், பந்தை பஞ்சாப் அணி பீல்டர் ரிஷி தவண் பிடிப்பார் என்று கில் நினைக்கவில்லை. 

ஆனால், ரிஷி தவன் பந்தை பீல்டிங் செய்ததோடு, சரியாக குறிபார்த்து ஸ்டெம்பை நோக்கி எறிந்து கில்லை ரன் அவுட் செய்தார். மூன்றாவது நடுவருக்குக் கூட செல்லாமல் களநடுவரே அவுட்  வழங்கினார். கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், ஆட்டமிழந்து வெளியே செல்லும்போது பஞ்சாப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவைப் பார்த்து கோபமாகப் பேசிய கில், அவரிடம் சண்டையிட்டுச் சென்றார். 

தான் ரன்அவுட் ஆகிய விரக்தியில் சந்தீப் சர்மாவிடம் கோபப்பட்டு கில் வெளியேறியது வியப்பாக இருந்தது. ரன்அவுட் ஆகிய யாருடைய தவறு கில்லுடைய தவறு அதற்காக பந்துவீச்சாளரிடம் கோபப்படுவது எவ்வாறு நியாயம் என்று நெட்டிஸன்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

click me!