ipl 2022 gt vs pbks: ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறு: 117 மீட்டர் சிக்ஸர்: ஷமியை மூட்அவுட் செய்த லிவிங்ஸ்டன்

By Pothy RajFirst Published May 4, 2022, 11:02 AM IST
Highlights

ipl 2022 gt vs pbks :மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமியின் ரமலான் கொண்டாட்ட மனநிலையை பஞ்சாப் கிங்ஸ் வீரர் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தால் உடைத்தெறிந்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமியின் ரமலான் கொண்டாட்ட மனநிலையை பஞ்சாப் கிங்ஸ் வீரர் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தால் உடைத்தெறிந்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 145 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் அணி வீரர் ஷிகர் தவண் 62 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்குஅழைத்துச் சென்றனர். 

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலி்ல 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டோன் 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். முகமது ஷமி வீசிய 16-வது ஓவரில் லிவிங்ஸ்டோன் ஹாட்ரிஸ் சிக்ஸர்கல், 2 பவுண்டரி 2 ரன்கள் என மொத்தம் 28 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதில் லிவிங்ஸ்டோன் டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் இமாலய சிக்ஸரை விளாசினார். ஏறக்குறைய 117 மீட்டர் உயரத்துக்கு சிஸ்கர் அடித்து அனைவரையும் லிவிங்ஸ்டன் அசத்தினார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச உயரத்துக்கு அடிக்கப்பட்ட சிக்ஸர் இதுதான் என்ற வரலாறு படைத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடும் கொண்டாட்டத்தில் இருந்தார். ஆனால், அவர் வீசிய 16-வது ஓவரில் 28 ரன்களை விளாசிய லிவிங்ஸ்டன் விளாசி ஷமியின் கொண்டாட்ட மனநிலையை கெடுத்துவிட்டார். 

வெற்றிக்குப்பின் லிவிங்ஸ்டன் அளித்த பேட்டியில் கூறுகையில் “  நான் இன்று பேட்டிங் செய்வேன் என்று நினைக்கவில்லை. அதிலும் நடுவரிசையில் களமிறங்காமல் திடீரென அனுப்பினார்கள்.  ஷிகர் தவண் அருமையாக ஆடி வந்ததால் அவர்தான் ஆட்டத்தை முடிப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில்நான் அடித்து ஆட்டத்தை முடித்து, மிகப்பெரிய வெற்றிக்கு துணையாக இருந்தது

மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரு போட்டிகளில் மோசமாக விளையாடியநிலையில் அந்த மனநிலையிலிருந்து வெளியேற இந்த வெற்றி உதவும். மயங்க் அகர்வால் நடுவரிசையில் களமிறங்கும்போது, விக்கெட் சரிந்தாலும் அவரால் தாக்குப்பிடித்து ஆட முடியும். சில நேரங்களில் மிகவும் கடினமான தருணங்களைக் கடந்திருக்கிறோம். இந்த மிகப்பெரிய வெற்றி வீரர்களுக்கு ஊக்கமாக அமையும். வெற்றி தோல்வி அனைத்தும் நமக்கு பாடங்கள்தான் அதிலிருந்து கற்கிறோம்” எனத் தெரிவித்தார்

click me!