வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டன் நியமனம்

Published : May 03, 2022, 09:52 PM IST
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டன் நியமனம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்துவந்த கைரன் பொல்லார்டு அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 முக்கியமான ஐசிசி தொடர்கள் நடக்கவிருப்பதால், ஒரு தரமான வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருந்தது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அறிமுகமான பூரன், 2019ம் ஆண்டு ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்காக 37 ஒருநாள் மற்றும் 57 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் பூரன். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் அபாரமாக ஆடிவரும் பூரனின் கேப்டன்சியில் சில மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் கலந்துகொள்ளவுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!