GT vs PBKS: சாய் சுதர்ஷன் பொறுப்பான அரைசதம்.. பஞ்சாப் கிங்ஸுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்

Published : May 03, 2022, 09:28 PM IST
GT vs PBKS: சாய் சுதர்ஷன் பொறுப்பான அரைசதம்.. பஞ்சாப் கிங்ஸுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 144 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஹா 21 ரன்னில் நடையை கட்டினார். ஹர்திக் பாண்டியா(1), டேவிட் மில்லர்(11), ராகுல் டெவாட்டியா(11), ரஷீத் கான்(0) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் நடையை கட்ட, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணி 143 ரன்கள் அடிக்க உதவினார். சாய் சுதர்ஷன் 50 பந்தில் 64 ரன்கள் அடித்தார்.

20 ஓவரில் 143 ரன்கள் அடித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, 144 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!