இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ்: பிரணாய், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர்…

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ்: பிரணாய், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர்…

சுருக்கம்

Indonesia Open Super Series Pranai and Srikanth advance to quarterfinals

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் எச்.எஸ். பிரணாய் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மலேசியாவின் லீ சாங் வெய்யுடன் மோதினர்.

இதில், 21-10, 21-18 என்ற நேர் செட்களில் லீ சாங் வெய்யை தோற்கடித்து வென்றார் பிரணாய்.

பிரணாய் தனது காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை சந்திக்கிறார்.

மற்றொரு 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸனுடன் மோதியதில் 21-15, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் சீன தைபேவின் ஸþ வெய் வாங்கை சந்திக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!