இந்தோனேசியா பேட்மிண்டன் இறுதிப்போட்டி... பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!

By vinoth kumarFirst Published Jul 21, 2019, 4:56 PM IST
Highlights

இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் அகானே யமகுச்சிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் அகானே யமகுச்சிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.  இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கியது முதலே அகானே யமகுச்சி ஆதிக்கம் செலுத்தினார். அவரது ஆட்டத்திற்கு அனுபவம் வாய்ந்த பி.வி. சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அகானே யமகுச்சி 21-15, 21-16 என நேர்செட் கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தினார். 

இதனையடுத்து, சாம்பியன் பட்டத்தை அகானே யமகுச்சி தட்டிச்சென்றார். இதற்கு முன் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். இதில் பி.வி. சிந்து 10 முறை வென்றுள்ளார். மேலும் கடைசி 4 போட்டிகளில் பி.வி. சிந்து யமகுச்சியிடம் தோல்வியடைந்ததே கிடையாது. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் யமகுச்சி சிறப்பாக செயல்பட்டு பி.வி. சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 2-வது இடம் பிடித்து பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

click me!