
நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடியானது, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை ரோகன் போபண்ணா ஜோடியானது 6-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ராஜீம் ஆம் ஜோடியானது, 6-3, 6-4 என்று அடுத்தடுத்து கைப்பற்றியது. இறுதியில் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது அதிர்ச்சி அளிக்கிறது.
SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.