இந்திய அணியிடம் இருக்குற ஒரு விஷயம் வேற எந்த டீமுலயும் இல்ல!! அதுதான் அவங்க பலம்.. ஸ்பின் லெஜண்ட் முரளிதரன் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 11, 2019, 1:14 PM IST
Highlights

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது. 
 

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி வலுவான அணியாக திகழ்கிறது. மூன்று விதமான போட்டிகளிலும் அந்நிய மண்ணிலும் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது இந்திய அணி. அண்மைக்காலமாக இந்திய அணி வெற்றிகளை குவித்துவருவதில் பவுலர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது. 

அதிலும் குறிப்பாக குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, எதிரணிகளின் சொந்த மண்ணில் அந்த அணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்து கெத்து காட்டிவருகிறது. அஷ்வின் - ஜடேஜா சிறந்த ஸ்பின் ஜோடியின் இடத்தை பூர்த்தி செய்துள்ள ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி அபாரமாக பந்துவீசிவருகின்றனர். 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தனர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவர்களின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாததே இவர்களின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இதுவரை இவர்களின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாததால் உலக கோப்பையில் இவர்கள் இருவரும் பெரும் பங்காற்றுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 

இந்நிலையில் குல்தீப் மற்றும் சாஹல் குறித்து பேசியுள்ள ஸ்பின் லெஜண்ட் முத்தையா முரளிதரன், ரிஸ்ட் ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங்கால் இந்திய அணி வெற்றிகளை குவித்துள்ளது. அதன் விளைவாக ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது இந்திய அணி தேர்வாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய அணி 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களை பெற்றுள்ளது. மற்ற எந்த அணிகளிலும் இது இல்லை. எனவே இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். உலக கோப்பை நடக்க உள்ள இங்கிலாந்தின் சூழலும் ஆடுகளங்களும் ஸ்விங் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே உலக கோப்பையில் குல்தீப்பும் சாஹலும் முக்கிய பங்காற்றுவார்கள் என முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!