மேட்ச்ல தோற்றதும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!! வீடியோ

By karthikeyan VFirst Published Feb 11, 2019, 11:49 AM IST
Highlights

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி, கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. 

213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே அடித்து ஆடினர். ஷிகர் தவானின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்த நிலையில், இக்கட்டான சூழலில் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய விஜய் சங்கர், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினார். அதன்பிறகு களத்திற்கு வந்ததுமே முதலே அடித்து ஆடிய ரிஷப் பண்ட், 12 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். 

பின்னர் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா என அனைவருமே அதிரடியாக ஆடினர். எனினும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை விரட்டிய போட்டிகளில் இந்திய அணி தோற்றதேயில்லை, இதுதான் முதன்முறை.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியா ரன் ஓடுவதற்கு அழைக்க, தினேஷ் கார்த்திக் மறுத்துவிட்டார்.  அடுத்த மூன்று பந்தையும் அடித்து ஆட நினைத்த தினேஷ் கார்த்திக்கால் அது முடியவில்லை.  4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க, ஐந்தாவது பந்தில் குருணல் ஒரு ரன் அடித்தார். கடைசி பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை வைடாக போட்டார் சௌதி. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஒருவேளை மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக மாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் குருணல் பாண்டியாவும் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். மூன்றாவது பந்தை அடித்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், நான்காவது பந்தில் குருணல் பெரிய ஷாட் ஆடியிருக்கலாம், ஆடாமலும் போயிருந்திருக்கலாம். ஆனால் மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியாவின் அழைப்பை ஏற்க மறுத்ததற்கு, போட்டி முடிந்ததும் மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக். அவர் சிங்கிளை மறுத்தது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஏற்படுத்தாமல் போவதும் இரண்டாவது விஷயம். ஆனால் அதுவும் ஒரு தவறாக இருந்திருக்குமோ என்ற உணர்வில் ஜெண்டில்மேனாக மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்.

pic.twitter.com/vdS0O6TrcY

— रति शंकर शुक्ल (@rati_sankar)
click me!