சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்வுக் குழுவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா..! தேசத்திற்கே பெருமை

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 10:42 PM IST
Highlights

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ் இந்தியாவிற்கு தங்கம் வென்று சாதனை படைத்த அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான தேர்வுக்குழு உறுப்பினராக அபினவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான (IOC) IOC உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் (IOC) தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார். முன்னாள் கோஸ்டாரிகா அதிபர் லாரா சின்சில்லாவுடன் ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் அபினவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடனின் உயரம் தாண்டுதல் சாம்பியன் ஸ்டீபன் ஹோம், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மற்றும் அமெரிக்க ஒலிம்பிக்கில் ஹாக்கி தங்கப் பதக்கம் வென்ற ஏஞ்சலா ருகிரோ ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எலெக்‌ஷன் கமிஷனில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஹோமின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ​​2018 ஆம் ஆண்டுக்குள் கமிஷன் உறுப்பினராக ருகிரோ தனது பதவிக் காலத்தை முடித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய உறுப்பினர்களைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்ற முக்கியமான அமைப்பாகும்.

அபினவ் பிந்த்ரா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள்ஸில் தங்கம் வென்றபோது, விளையாட்டு வரலாற்றில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். இது தவிர உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றுள்ளார். அவர் அர்ஜுனா, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றுள்ளார். அபினவ் பிந்த்ராவுடன், லாரா சின்சில்லாவும் ஐஓசி தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளார். சின்சில்லா 2010 முதல் 2014 வரை கோஸ்டாரிகாவின் அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!