
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவதற்காக இந்தியர்களான யூகி பாம்ப்ரி-ராம்குமார் ராமநாதன் மோதுகின்றனர்.
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதன் தகுதிச்சுற்று ஒன்றில் யூகி பாம்ப்ரி 7-5, 7-5 என்ற செட்களில் அமெரிக்காவின் டெனிஸ் நோவிகோவை வீழ்த்தினார்.
அதேபோன்று மற்றொரு தகுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் 6-3, 7-5 என்ற செட்களில் மற்றொரு அமெரிக்கரான மிட்செல் மோவை வென்றார்.
இதனையடுத்து, கடைசி தகுதிச்சுற்றில் யூகி - ராம்குமார் இருவரும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர் பிரதான சுற்றுக்கு முன்னேறி முதல் சுற்றில் விளையாடுவதற்காக ரூ.10.12 இலட்சம் பரிசுத் தொகை பெறுவார். அவருக்கு 26 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும்.
தோல்வியை சந்திக்கும் நபருக்கு சுமார் ரூ.3 இலட்சமும், 8 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.