சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Champions League football Real Madrid team progress to quarterfinals

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 2-வது பகுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெயின் அணியை வென்றது. 

ரியல் மாட்ரிட் அணி முதல் பகுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களிலும் முன்னிலை பெற்றதை அடுத்து ரியல் மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறியது.

ரியல் மாட்ரிட் அணிக்கான கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோவும், பாரீஸ் அணிக்கான கோலை எடின்சன் கவானியும் அடித்தனர். இதில் ரொனால்டோ அடித்த முதல் கோல், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்கான அவரது 100-ஆவது கோல் ஆகும்.

பாரீஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?
Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!