
டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் இந்திய வீரர் சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 96 இடங்கள் முன்னேறி 225-வது இடத்தை பிடித்துள்ளார்.
டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் இந்திய வீரர் சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 96 இடங்கள் முன்னேறி 225-வது இடத்துக்கு வந்துள்ளார். இது, தரவரிசையில் அவர் பிடித்திருக்கும் அதிகபட்சமாகும்.
பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் தனது முதல் சேலஞ்சர் பட்டம் வென்றதை அடுத்து, அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
யூகி பாம்ப்ரி இரண்டு இடங்கள் முன்னேறி 116-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது கொசுறு தகவல்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா 16 இடங்கள் முன்னேறி 277-வது இடத்திலும், கர்மான் கெளர் தன்டி நான்கு இடங்களை இழந்து 288-வது இடத்திலும் உள்ளனர்.
இரட்டையர் பிரிவில், திவிஜ் சரண் முதல் முறையாக 47-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பிரிவில் ரோஹன் போபண்ணா 18-வது இடத்தில் தொடருகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.