
ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே போன்ற சுழல் ஜாம்பவான்கள்கூட செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய சுழல் மன்னன் அஸ்வின்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் மிக மோசமான தோல்வி இதுதான்.
இந்த போட்டியில் முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோர் சதமும் கேப்டன் விராட் கோலி, இரட்டை சதமும் அடித்து அசத்தினர். இந்தியாவின் சிறப்பான பேட்டிங்கால், அதிக ரன்களைக் குவித்தது வெற்றிக்கு காரணம்.
ஆனால், அதேநேரத்தில் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கையை சரித்த அஸ்வினின் பந்துவீச்சும் அபாரம். இந்த போட்டியில் தனது 300வது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், குறைந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார்.
சுழல் ஜாம்பவன்களான முத்தையா முரளிதரன்(இலங்கை), ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா) போன்றோர்கள்கூட அஸ்வினை விட அதிகமான போட்டிகளில்தான் தங்களது 300வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
அஸ்வின் 54 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுத்டு லில்லி என்ற ஆஸ்திரேலிய வீரர் 2 வது இடத்தில் உள்ளார்.
முத்தையா முரளிதரன் 58 போட்டிகளிலும் ஷேன் வார்னே 63 போட்டிகளிலும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
300 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய வீரர்களின் பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் - 54 போட்டிகள்
2. டென்னிஸ் லில்லி - 56 போட்டிகள்
3. முத்தையா முரளிதரன் - 58 போட்டிகள்
4. ஹார்ட்லி/ மார்ஷல்/ ஸ்டெயின் - 61 போட்டிகள்
5. ஷேன் வார்னே - 63 போட்டிகள்
6. ஆலன் டொனால்ட் - 64 போட்டிகள்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.