இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான அட்டவணை: செப்.21ல் கேரளா – பெங்களூரு பலப்பரீட்சை!

By Rsiva kumar  |  First Published Sep 13, 2023, 7:09 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29 ஆம் தேதி வரையில் மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது.


இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) என்பது இந்திய கால்பந்து லீக் அமைப்பில் ஆண்களுக்கான மிக உயர்ந்த போட்டி தொடர் ஆகும். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் முதல் தொடர் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்பட்டது.

ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ரோகித் சர்மா முன்னேற்றம், விராட் கோலி சரிவு!

Tap to resize

Latest Videos

முதல் சீசனில் Atletico de Kolkata (அட்லெடிகோ டி கொல்கத்தா - ஏடிகே) அணி முதல் முறையாக சாம்பியனானது. 2ஆவது சீசனில் சென்னையின் எஃப் சி அணி சாம்பியனானது. கடந்த சீசனில் ஏடிகே மோகன் பாகன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான 10ஆவது சீசன் வரும் 21 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் பெங்களூரு, சென்னையின், ஈஸ்ட் பெங்கால், கோவா, ஹைதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பாகன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை சிட்டி, ஒடிசா, பஞ்சாப், நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 12 அணிகள் இடம் பெற்று விளையடுகின்றன.

IND vs SL: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5ஆவது இடம்!

இந்த ஐஎஸ்.எல். தொடரானது வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29 ஆம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான சீசன் 22-சுற்று வழக்கமான சீசனை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து முதல் 6 அணிகளை உள்ளடக்கிய பிளேஆஃப்கள், சாம்பியன்களை தீர்மானிக்க ஐஎஸ்எல் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. வழக்கமான சீசனின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற அணி முதன்மையாக அறிவிக்கப்பட்டு லீக் வெற்றியாளர்களின் கேடயம் வழங்கப்படும்.

பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!

ஆசிய கான்டினென்டல் கிளப் போட்டிகளுக்கு ISL கிளப்புகள் தகுதி பெறுகின்றன; வழக்கமான சீசன் பிரீமியர்கள் அடுத்தடுத்த சீசனின் AFC கோப்பை குழு நிலைக்கு நேரடியாக தகுதி பெறுகின்றனர். இந்த நிலையில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. முதல் போட்டியில் கேரளா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. சென்னையின் எப்.சி.அணி தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி ஒடிசா அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, எந்தெந்த அணிகள் எப்போது போட்டியிடுகின்றன என்று பார்க்கலாம்…

பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?

தேதி அணிகள் இடம் நேரம்
21.09.23 கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எஃப்சி கொச்சி  8 PM 
22.09.223 ஹைதராபாத் எஃப் சி - கோவா எஃப் சி  ஹைதராபாத்  8 PM
23.09.23 ஒடிசா - பெங்களூரு புவனேஷ்வர்  5.30 PM
24.09.23 நார்த் ஈஸ்ட் யுனைடெட் - மும்பை கவுகாத்தி  8 PM
25.09.23 ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர்  கொல்கத்தா  8 PM
27.09.23  மொகன் பாகன் - பெங்களூரு கொல்கத்தா   8 PM
28.09.23 ஒடிசா - மும்பை புவனேஷ்வர்   8 PM
29.09.23
நார்த் ஈஸ்ட் யுனைடெட் - சென்ன
புவனேஷ்வர்  8 PM
30.09.23  ஈஸ்ட் பெங்கால் - ஹைதராபாத் கொல்கத்தா  8 PM

`

 

𝐋𝐢𝐠𝐡𝐭𝐬, 𝐂𝐚𝐦𝐞𝐫𝐚, 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧! 🔥

Here are some of the best 📸 from the ! 🤩 pic.twitter.com/wZl9xLTbDX

— Indian Super League (@IndSuperLeague)

 

at Bengaluru ✅

Now the action shifts to Kolkata tomorrow 🤩 | pic.twitter.com/dWpOiZByI5

— Indian Super League (@IndSuperLeague)

 

click me!