அணுகுண்டா வெடிக்க போறாங்கனு நெனச்சேன்.. ஆனால் புஸ்வானம் ஆயிடுச்சு - கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jan 23, 2019, 5:54 PM IST
Highlights

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சனை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்திய குல்தீப் யாதவ், அதற்கடுத்த 3 விக்கெட்டுகளையும் மளமளவென சரித்தார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நேப்பியரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர மற்ற எந்த வீரரும் சோபிக்கவில்லை. தொடக்க வீரர்கள் கப்டில் மற்றும் முன்ரோ ஆகிய இருவரையும் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். பின்னர் டெய்லர் மற்றும் லதாம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். நிகோல்ஸை கேதர் ஜாதவும் சாண்ட்னெரை ஷமியும் வீழ்த்தினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சனை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்திய குல்தீப் யாதவ், அதற்கடுத்த 3 விக்கெட்டுகளையும் மளமளவென சரித்தார். இதையடுத்து அந்த அணி வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தபோதே, கடும் வெயில் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டதால் டக்வொர்த் முறைப்படி ஓவர் 49 ஆக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தவான் - கோலி ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய வின்னிங் கேப்டன் விராட் கோலி, எங்களது சமநிலை வாய்ந்த ஆட்டத்தில் இதுவும் ஒன்று. இதைவிட சிறந்த பந்துவீச்சு ஒன்றை பவுலர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. டாஸ் தோற்றதுமே, அவர்கள் 300 ரன்களுக்கு மேல் அடித்து விடுவார்கள். பெரிய இலக்கை விரட்ட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் 157 ரன்களுக்கு சுருட்டிவிட்டனர் எங்கள் பவுலர்கள். ஷமி அபாரமாக வீசினார். உலகின் எந்த அணியையும் வீழ்த்தவல்ல வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளோம். ஸ்பின் பவுலர்களும் நல்ல லைன் அண்ட் லெந்த்தில் வீசினர் என்று பவுலர்களை பாராட்டினார். 
 

click me!