Racing Festival : 3ம் முறை இந்தியாவில் நடக்கும் Motorsport நிகழ்வு - பிரபல டீமுக்கு ஓனரானார் சவுரவ் கங்குலி!

By Ansgar R  |  First Published Jul 11, 2024, 11:06 PM IST

Indian Racing Festival : மூன்றாவது முறையாக இந்தியாவின் 8 நகரங்களில் மோட்டார்ஸ்போர்ட் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த போட்டிகள் துவங்குகிறது.


இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் நிகழ்வின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவர்கள், இந்த இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் கலந்துகொள்ளும் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் மோட்டர் ஸ்போர்ட் நிகழ்வுகளுக்கான ஒரு நல்ல சுற்றுச்சூழலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த இந்திய ரேசிங் பெஸ்டிவல் நடத்தப்படுகிறது.

இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், என்கின்ற இந்த இரு முக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகளை உள்ளடக்கியது தான் இந்த இந்தியன் ரேசிங் பெஸ்டிவல். இதை ரேசிங் ப்ரோமோசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கின்ற நிறுவனம் தான் தலைமையேற்று உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

undefined

இந்திய வீராங்கனை சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர் முர்மு

கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை இந்த இந்திய ரேசிங் பெஸ்டிவலில் போட்டியிட உள்ளன. இந்த போட்டிகளில் முதல் முறையாக கொல்கத்தா அணி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் "கல்கத்தாவின் இளவரசர்", "தாதா" என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சவுரவ் கங்குலி தான் முதல் முறையாக இந்த இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் பங்கேற்க உள்ள கொல்கத்தா ராயல் டைகர் அணியின் உரிமையாளராக இதில் இணைந்துள்ளார். இந்தியாவின் இந்த புதிய மோட்டார் வாகன போட்டிகளுக்கு சவுரவ் கங்குலியின் வருகை, ஒரு மாபெரும் உற்சாகத்தையும், கௌரவத்தையும் அளித்திருக்கிறது. இந்த முறை கங்குலி தலைமையேற்றுள்ள நிலையில், கொல்கத்தா அணி மிகவும் சிறப்பாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிகளுக்கு கங்குலியின் வருகை குறித்து பேசிய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் நிறுவனம், கங்குலி அவர்களுடைய வருகை இந்த போட்டிகளுக்கு பெருமை சேர்ப்பதோடு புதிய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயமாகவும் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மோட்டார் ஸ்போர்ட் ஆர்வலர்கள் அனைவரது ஆர்வத்தையும் கங்குலியின் வருகை தூண்டி இருப்பதாக RPPL தலைவர் அகிலேஷ் ரெட்டி கூறினார்.

இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் என்றால் என்ன?

இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் (IRF) என்பது இந்தியாவில் அதிகரித்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வாகும். இந்திய ரேசிங் லீக் (IRL) மற்றும் ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப் (F4IC) ஆகியவை இந்திய ரேஸிங் விழாவின் முக்கிய அங்கங்களாகும். இந்திய ரேசிங் லீக் FMSCI (இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு) அங்கீகரிக்கப்பட்டது, இது போட்டிக்கு கௌரவம் மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை சேர்க்கிறது.

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL)

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அகிலேஷ் ரெட்டி மற்றும் தொழில்முறை ரேஸர்களான அர்மான் இப்ராஹிம் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரால் கடந்த 2019ல் இணைந்து நிறுவப்பட்டது. இந்த மோட்டார் ஸ்போர்டில் உள்ள திறமை மற்றும் அதற்கான வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் இவர்கள் செயல்படுகின்றனர். 

ரேசிங் பிரமோஷன்ஸ் பிரைவேட். Ltd. (RPPL) ஆனது இந்தியாவில் ஒரு முழுமையான மோட்டார் ஸ்போர்ட் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு என்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. FIA-கேலிபர் நிகழ்வுகளை நடத்துவதற்கும், ஓட்டுநர்கள், பொறியாளர்கள் மற்றும் இயக்கவியல் போன்ற தொழில்களைத் தொடர ஆர்வமுள்ள நபர்களுக்கான பாதைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுகிறது. 

Zimbabwe vs India, 3rd T20I: வாஷிங்டன் சுழலில் 159 ரன்னுக்கு சுருண்ட ஜிம்பாப்வே – இந்தியா 2-1 என்று முன்னிலை!

click me!