
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு இத்தாலி, அயர்லாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளன சிறப்பு பயிற்சி இயக்குநர் சான்டியாகோ நைவா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் ஜாகர்த்தாவில் நடக்கின்றன. இதில் இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள நிலையில் சிறப்பு பயிற்சி அளிக்க குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்தது.
மேரிகோம், மோனிகா, சாருபாலா தேவி, பிங்கி ராணி, மீனா மைஸ்னம், சோனியா லேதர், சாஷி சோப்ரா, சரிதா தேவி, பவித்ரா, சிம்ரஞ்சித் கெüர், லாவ்லினா, பூஜா ஆகியோர் இத்தாலியில் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
அங்கு ஏற்கெனவே பின்லாந்து, ருமேனியா, இத்தாலி, மான்டிநீக்ரோ நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், சவிட்டி போரா, சீமா புனியா, லால்மாய் ரதே, உள்ளிட்டோரும் பயிற்சி பெறுகின்றனர்.
அதேநேரத்தில் ஆடவர் பிரிவில் ஹிமான்சு சர்மா, கௌரவ் சோலங்கி, சல்மான் ஷேக், மதன்லால், அன்குஷ் தாஹியா, தீரஜ்குமார், ஆஷிஷ், துரியோதன் நேகி, மந்தீப் ஜாங்ரா, சஞ்சீத், மணிஷ் பவார், பர்வீன்குமார் உள்ளிட்டோர் அயர்லாந்தில் உள்ள சிறப்பு பயிற்சி முகாம் பயிற்சி பெறுகின்றனர்.
பயிற்சிக்கு பின்னர் பல்வேறு போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்வர். இரு மாதங்களுக்கு பின்னர் ஆசிய போட்டிகள், உலக சாம்பியன் போட்டிகளில் பங்கேற்பர்.
ஆசியப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் 49, 52, 56, 60, 64, 69, 75 கிலோ பிரிவுகளிலும், மகளிர் பிரிவில் 51, 57, 60, கிலோ பிரிவிகளும் மோதுகின்றனர்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.