
எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி ஒரே ஒரு கோல் போட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் வென்றது.
எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டி இங்கிலாந்தின் பிரபல விளையாட்டு. இதில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பைக்கு தகுதி பெற முடியாத நிலையிலும், இரு அணிகளுக்கு இந்த கால்பந்து சீசனில் எந்த பட்டமும் கிடைக்கவில்லை.
இதனால்,, எஃப் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடின. ஆனால் செல்சி அணியின் ஈடன் ஹசார்ட் 22-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஓரே வெற்றி கோலை அடித்தார்.
அதன்பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணி பலமுறை முயன்றும் கோலடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் பந்து பெரும்பாலும் மான்செஸ்டர் அணியின் வசம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. இதன்மூலம் செல்சி அணி கோப்பை வென்று அசத்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.