
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் கொரியாவிடம், இந்தியா தோல்வியடைந்தது.
ஐந்தாவது மகளிர் சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டிகள் கொரியாவின் டோங்கேசிட்டியில் நடந்து வருகின்றன.
இதில் நடப்புச் சாம்பியன் இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
ரௌண்ட் ராபின் முறையில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்ற இந்தியாவும், இரண்டாவது இடம் பெற்ற கொரியாவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 1-0 என்ற கோல் கணக்கில் கொரியா வென்று ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கொரியாவின் யங்சில் லீ அடித்த பீல்ட் கோலால் 1-0 என கொரியா முன்னிலை பெற்றது. எனினும், இந்திய மகளிர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
கொரியாவின் தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் இந்திய வீராங்கனைகளால் ஊடுருவ முடியவில்லை. பெனால்டி கார்னர் முறையில் கோலடிக்க கொரிய அணி மேற்கொண்ட முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் சவிதா முறியடித்தார்.
இதனையடுத்து இந்தியா கோப்பையை தக்க வைக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.