ஆஸ்திரேலியாவுல அதகளம் பண்ண இந்தியாவின் அதிரடி திட்டம்

By karthikeyan VFirst Published Nov 11, 2018, 2:13 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்துவதன் மூலம் இந்திய அணி நம்பர் 1 அணிதான் என்பதை நிரூபிக்க முடியும். 
 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறதே தவிர வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்துவதன் மூலம் இந்திய அணி நம்பர் 1 அணிதான் என்பதை நிரூபிக்க முடியும். 

ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் என வேகப்பந்து வீச்சு யூனிட் சிறப்பாக உள்ளது. 

எனவே ஆஸ்திரேலிய தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாவிட்டாலும் இந்திய அணி அதிகமான ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். அதிக ரன்களை குவித்தால்தான் வெற்றி பெற முடியும்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்சாகும் என்பதால், பவுன்ஸர்களை சிறப்பாக ஆடும் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தக்கூடும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ரன் குவிப்பது குறித்து பேசிய சேவாக், இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் வேகமாக வரும். ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். எனவே பவுன்ஸை நன்றாக ஆடினால், ஆட்டத்தின் எந்த நாளிலும் ஸ்கோர் செய்யலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!