பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணிக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 என்று வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 67ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தான் வெண்கலப் பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழத்தி 4ஆவது வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது. எனினும், பதக்கப் பட்டியலில் தொடர்ந்து 67ஆவது இடத்தில் நீடிக்கிறது.
அன்ஷூ மாலிக் தோல்வி – 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
undefined
இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. முதலில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஸ்பெயின் முதல் கோலை அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது.
இதையடுத்து, போட்டியின் 30ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் 33ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலையில் இருந்தது. இறுதியாக போட்டி முடியும் வரையில் ஸ்பெயின் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
100மீ தடை தாண்டும் ஓட்டம் – 4ஆவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்த ஜோதி யார்ராஜி!
இதன் மூலமாக 52 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 3ஆவது முறையாக இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 1928 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றது. 1968 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
இதையடுத்து தொடர்ந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றி வந்த இந்தியா பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா ஹாக்கியில் 13ஆவது பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக இந்த தொடரில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 10 கோல் அடித்துள்ளார்.
வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஸ்வப்னில் குசலே – காரில் ஊர்வலமாக அழைத்து சென்ற உறவினர்கள்!
இந்த போட்டியில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங்கிற்கு கிரீன் கார்டு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா 10 வீரர்கள் உடன் விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து கோல் கீப்பரான பி ஆர் ஸ்ரீஜேஷ் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து 2ஆவது முறையாக ஸ்ரீஜேஷ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பி ஆர் ஸ்ரீஜேஷ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.