அன்ஷூ மாலிக் தோல்வி – 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

By Rsiva kumar  |  First Published Aug 8, 2024, 6:41 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் நீச்சல், ஹாக்கி, கோல்ஃப், தடகளம், வில்வித்தை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை என்று 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்று வருகிறது.

100மீ தடை தாண்டும் ஓட்டம் – 4ஆவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்த ஜோதி யார்ராஜி!

Tap to resize

Latest Videos

ஆனால், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, நீச்சல், டென்னிஸ், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் என்று 11 விளையாட்டுகளில் இந்தியா பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது. இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. கடைசியாக மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்க இருந்த தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கைநழுவிப் போனது. ஆம், இந்த போட்டியில் இந்தியா சார்பில் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் கூடுதல் உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஸ்வப்னில் குசலே – காரில் ஊர்வலமாக அழைத்து சென்ற உறவினர்கள்!

இந்த நிலையில் தான் 13ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியா கோல்ஃப், தடகளம், மல்யுத்தம், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் அதிதி அசோக் மற்றும் திக்‌ஷா டாகர் முறையே 72 மற்றும் 71 புள்ளிகள் பெற்று 2ஆது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தற்போது 2ஆவது சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷூ மாலிக் முதல் சுற்று போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.

எலிமினேஷன் சுற்று என்று சொல்லப்படும் 16ஆவது சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் லூயிஸ் மரூலிஸை எதிர்கொண்டார். இதில், 2-7 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதே போன்று ஆண்களுக்கான 57கிலோ மல்யுத்த எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் மசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவ்வை எதிர்கொண்டார். இதில், செஹ்ராவத் 10-0 என்று புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அல்பானியா நாட்டைச் சேர்ந்த ஜெலிம்கான் அர்செனோவிச் அபகரோவ்வை எதிர்கொண்டார்.

ஹாக்கி, மல்யுத்தம், ஈட்டி எறிதலில் பதக்கம் கிடைக்க வாய்ப்பு – நீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது?

இந்தப் போட்டியில் செஹ்ராவத் 12-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். இதன் மூலமாக இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.

click me!