பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 100மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஜோதி யாராஜி ஹீட் பிரிவில் கிடைத்த 2ஆவது வாய்ப்பில் தோல்வி அடைந்து அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 67ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 13ஆவது நாள் போட்டியில் இந்தியா தங்கம் அல்லது வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஸ்வப்னில் குசலே – காரில் ஊர்வலமாக அழைத்து சென்ற உறவினர்கள்!
undefined
இதே போன்று ஹாக்கியில் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இன்று பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெற்ற மகளிருக்கான 100மீ தடை ஓட்டப் போட்டியில் 2ஆவது வாய்ப்பில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 4ஆவது இடம் பிடித்து அரையிறுதி போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஏற்கனவே முதல் சுற்றான ஹீட் பிரிவில் 7ஆவது இடம் பிடித்த நிலையில், அடுத்து சுற்றுக்கு முன்னேற கிடைத்த 2ஆவது வாய்ப்பில் 13.17 வினாடிகளில் இலக்கை கடந்து 4ஆவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இதற்கு முன்னதாக ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தடகள வீரர் அபினாஷ் சேபிள் ஹீட் போட்டியில் 5ஆவது இடம் பிடித்திருந்த நிலையில் இறுதிப் போட்டியில் 8:14:18 வினாடிகளில் இலக்கை கடந்து 11ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இந்த தொடரில் தோல்வி அடைந்து அவர் வெளியேறியிருந்தாலும், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவினாஷ் சேபிள் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.