டி20 உலக கோப்பையில் மிதாலி ராஜின் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!!

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 11:43 AM IST
Highlights

மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிதாலி ராஜின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிதாலி ராஜின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இதில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆடிவருகின்றன. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் ஏ பிரிவில் ஆடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் பி பிரிவில் ஆடுகின்றன. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் பிஸ்மா மரூஃப் மற்றும் நிதா தர் ஆகியோரின் அரைசதத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. 

134 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவரது அரைசதத்தால் இந்திய அணியின் வெற்றி எளிதானது. மிதாலி ராஜின் அதிரடி அரைசதத்தால் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 19 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 
 

click me!